வெள்ளி, 26 மார்ச், 2021

முருகைக்கீரையின் சத்துகளும் மற்றும் மருத்துவப் பயன்களும்

 

drumstick tree leaves medicine benefits

உடலின் நோய்எதிர்ப்பு சக்தியை பெருக்கும் நோக்கத்தில் நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.....

காசு போட்டு விலையுயர்ந்த பல்வேறு பொருட்களை வாங்க தேடித்தேடி அலைவோம்.. ஆனால் நம் கண்ணெதிரிலேயே, நம் வீடுகளின் அருகிலேயே கிடைக்கும் இயற்கையின் ஆற்றல் பொருந்திய அற்புதமான கீரைகளை அதிலும் குறிப்பாக முருங்கைக்கீரையை நாம் சாதாரணமாக கடந்து செல்லும் அவலமே இன்றளவும் உள்ளது....
நாம் கடைகளில் காசு போட்டு வாங்கும் எத்தனையோ கீரைகளை விட மிகச்சிறப்பான அற்புதமான, எத்தனையோ நற்குணங்களை தன்னுள்ளே கொண்டது தான் முருங்கையின் தனித்துவம்....
நம் உடலினில் ஏற்படும் நோய்களை நீக்குவதுடன், நோய்கள் வராமல் பாதுகாக்கும் கேடயமாக விளங்கும்... நம் உடலுக்கு தேவையான இரும்புசத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மெக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் A, வைட்டமின் C,
வைட்டமின் B complex, பீட்டாகரோடின், என அத்தனை நற்சத்துக்களையும் தன்னுள்ளே கொண்ட அற்புதமான கீரை....
அன்றாடம் நம் உணவில் ஏதோ ஒரு வகையில் முருங்கைகீரையினை சேர்த்துக்கொண்டு வர, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். அதிகுருதியழுத்தத்தினை குறைத்து இருதயத்தின் பலத்தினை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கெட்டக்கொழுப்பின் அளவினை குறைத்து மாரடைப்புக்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும்... மேலும் ரத்தசிவப்பணுக்களின் எண்ணிக்கையை கூட்டி ரத்தசோகை வராமல் தடுக்கும்.... 👌👌👌👌👌👌
ஒரு கைப்பிடி அளவு கீரையை, 1ஸ்பூன் நெய்யில் வதக்கி, இதனுடன் 5 பல் வெள்ளைப்பூண்டு, 5மிளகு, 1 ஸ்பூன் சீரகம் இவற்றையும் பொடித்து போட்டு, அன்றாடம் மதியஉணவில் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து ஒரு பிடி உண்டுவர, ரத்தசோகை நோயினால் அவதிப்படும் நோயாளிகளுக்கு நிச்சய பலன் கொடுக்கும்.
Hb எனப்படும் ஹீமோகுளோபினை அபரிமிதமாக பெருக்கும் என்பதில் ஐயம் இல்லை....
மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கும் அற்புத தீர்வாக அமையும்...
👍👍👍👍👍
பாலூட்டும் பெண்களுக்கு தாய்பாலின் சுரப்பினை அதிகப்படுத்தும்...
கர்ப்பிணி பெண்கள் கருக்கொண்ட முதலாவது மாதம் தொடங்கி முருங்கைக்கீரையை உணவில் கூட்டிக்கொண்டு வர வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறது நவீன ஆய்வு தகவல்கள்.... 👶👶👶
ரத்தக்குறைபாடு காரணமாக ஏற்படும் முடிஉதிர்வினை தடுத்து, முடிவளர்ச்சியை தூண்டும் வல்லமை இதற்கு உண்டு.... மேலும் நரைமுடி வராமலும் தடுக்கும்.... அதிக அளவில் நார்ச்சத்து உள்ள காரணத்தால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.... இதில் பொதிந்துள்ள பல்வேறு நற்சத்துக்கள் காரணமாக வயிற்றுபுண் மற்றும் வாய்ப்புண் வராமல் தடுக்கும்..... 👌👌👌👌👌
முருங்கைக்கீரையுடன் வேர்க்கடலை சேர்த்து சமைத்துண்ண, பெண்களுக்கு கருப்பை வலிமைபெறும்.... அடிக்கடி ஏற்படும் கருசிதைவினையும் தடுத்து குழந்தைபேற்றினை கொடுக்கும்..... 👍👍👍👍👍
புரதச்சத்து குறைபாடு காரணமாக உடலெடை கூடாமல் உள்ள குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை மிகச்சிறந்த மருந்து என்றே கூறலாம்.....
முருங்கைகீரையுடன் சின்னவெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள் கூட்டி சூப் வடிவில் தினம்தோறும் குழந்தைகளுக்கு கொடுத்துவர தேறாத குழந்தையும் தேறும்......
👼👼👼👼👼
ஒரு கைப்பிடி அளவு முருங்கைப்பூவினை 1ஸ்பூன் நெய்யில் வதக்கி, காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டு வர விந்துகோளாறுகள் அனைத்தும் குணமாகும்.....இதை தொடர்ந்து 48நாட்கள் உண்டுவர நீர்த்த விந்துகெட்டிப்படும். விந்துஅணுக்களின் எண்ணிக்கை கூடும்.
மேலும் விந்தணுக்களின் கோளாறுகள் (Morphological disorders ) தீரும். 💪💪💪💪💪
ஒரு கைப்பிடி முருங்கைப்பூவினை 1டம்ளர் பாலில் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு கூட்டி, தினந்தோறும் இரவு படுக்கும் முன்பு பருகிவர, விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டி குழந்தைபாக்கியத்தை உண்டாக்கும் .... 🙌🙌🙌🙌
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடி அலைவதை நிறுத்திகொண்டு, நம் மண்ணின் அற்புதம் பொருந்திய பொக்கிஷமான முருங்கையின் நன்மைகளை உணர்ந்து, எடுத்துக்கொள்ள நிச்சயம் நம் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் ஐயமில்லை..... 🙏🙏🙏🙏

Follow us in Youtube, Telegram, Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக