செவ்வாய், 30 மார்ச், 2021

புரதம் ஒரு பொக்கிஷம் (Proteins is a treasure)

 

புரதம் ஒரு பொக்கிஷம் (Proteins is a treasure)

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காணப்படும் பொருட்களில் மாவுசத்து, புரதசத்து, மற்றும் கொழுப்பு சத்து இவை ஒருங்கே இருக்க வேண்டியது அவசியமான ஒன்று... அதிலும் குறிப்பாக இவை ஒவ்வொன்றும் சரியான விகிதத்தில் இருப்பது இன்னும் சிறப்பானது....

நம் உடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தவும், உடல்வளர்ச்சியினை மேம்படுத்தவும், உடலின் நோய்எதிர்ப்பு வன்மையை பெருக்கிக்கொள்ளவும், உடலுக்கு உண்மையான ஊட்டத்தினை அளித்து நோய்நொடியின்றி நெடுங்காலம் வாழவும் துணைபுரியும் வல்லமையும் புரத சத்துக்கு உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை..... 💪💪💪💪💪
உடலின் தசைகளின் கட்டமைப்பிற்கும், பராமரிப்பிற்கும் புரதம் மிகவும் அவசியம்.....
உடலின் உறுதித்தன்மைக்கு அச்சாரமாக இருப்பதே நாம் உண்ணும் புரதமே.....
உடலில் நீருக்கு அடுத்தபடியாக அதிகம் காணப்படுவதே புரதசத்து தான்...
உடல்உறுப்புகள், நகம், தலைமுடி, சருமம் இவை அனைத்திலும் புரதமே உள்ளது.....
திசுக்களின் உருவாக்கத்திற்கு மூலாதாரமாக அமைவதே புரதங்கள் தான்....... 👌👌👌👌
புரதம் ஒரு பொக்கிஷம் (Proteins is a treasure)
புரதம் அத்தியாவசியமாக அனைவருக்கும் தேவைப்பட்டாலும், பெரும்பாலும் வளரும் குழந்தைப்பருவம், உடலின்வளர்ச்சி அதிகம் காணப்படும் பதின்மபருவம், பெண்கள் கருத்தரித்த காலங்கள், குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் அதிகமாக தேவைப்படுகிறது...... 👍👍👍👍👍
எலும்பு வளர்ச்சி, மண்ணீரல் கல்லீரல் திசுக்களின் வளர்ச்சி, பித்தப்பை, நிணநீர்ப்பை, கணையம், தைமஸ் இவற்றின் பணிகளை செவ்வனே செய்ய துணைபுரிகிறது.... 👌👌👌👌
வெள்ளை மற்றும் சிவப்பணுக்களின் உற்பத்தி, உணவுசெரித்தல், உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்தல் போன்ற பணிகளையும் செய்கிறது.... வயோதிகத்தினையும் தள்ளிப்போடும் ஆற்றல் இதற்கு உண்டு...... 👍👍👍👍👍
பற்கள், நுரையீரல், இரத்தக்குழாய்கள், இதயம் இவற்றை பாதுகாப்பதிலும், பலப்படுத்துவதிலும் புரதத்தின் பங்கு அளப்பரியது....
முடிஉதிர்வை தடுத்து மயிர்கால்களுக்கு ஆரோக்கியத்தினை நல்கும்..... 👌👌👌👌

புரதங்கள் எந்தெந்த உணவுகளில் இருக்கிறது? என்கிற பெருங்குழப்பம் நம்மில் பலரிடம் உள்ளது..... பெரும்பாலும் அசைவஉணவுகள், பால் மற்றும் பால்பொருட்கள், முட்டை போன்ற உணவுப்பொருட்களிலும், தாவரவகையில்
கொட்டைவகைகள், விதைகள், பழங்கள், பருப்புவகைகள், போன்ற பொருட்களிலும் நம் உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பது உறுதி 👍👍👍👍👍
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைபருப்பு, உளுந்தம்பருப்பு, மொச்சை, காராமணி, கொண்டைக்கடலை, பச்சைபட்டாணி, பச்சைப்பயறு, தட்டைபயறு, சோயாபீன்ஸ், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, முளைகட்டிய தானியங்கள், எள்ளு, சூரியகாந்தி விதை, பூசணிவிதை, பாதாம்பருப்பு, பிஸ்தாபருப்பு, அக்ரோட்டுபருப்பு, முந்திரிபருப்பு, காளான், பாலாடைக்கட்டி (பனீர் ), முட்டை, கோழிஇறைச்சி, ஆட்டுஇறைச்சி, மீன்உணவுகள், பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற புரதங்கள் நிறைந்த உணவுபொருட்களை தேர்ந்தெடுத்து அன்றாடம் நாம் உண்ணும் உணவில் எடுத்துக்கொண்டு நோயில்லா ஆரோக்கியமான நல்வாழ்வு வாழ்வோம்......

Dr. K. Rajkumar. M.D(Siddha).,
சித்த மருத்துவர், சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக