நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்னும் இவை அணுகாமல் பாதுகாத்து உடலினை கல் போல ஆக்கும் அற்புதம் நிறைந்த முறையையே காயகற்பம் என்கிறது சித்தமருத்துவம்.......
நோயினை நீக்கும் முறைகளை சொல்வதோடு மட்டுமல்லாமல், நோய்வராமல் தடுக்கும் நோயில்லா நெறிமுறைகளை போதிக்கும் ஒரே மருத்துவம் நம் சித்த மருத்துவமே.......
கொரோனா போன்ற இந்த இக்கட்டான நோய்த்தொற்று காலங்களில் நம் உடலின் நோய்எதிர்ப்புவன்மையை பெருக்கிக்கொள்ள கற்பிக்கப்படும் பல வழிமுறைகளில் முதலிடத்தில் இருப்பது நெல்லிக்காய்.....
நெல்லிக்காய் தானே, அதில் என்ன பிரமாதமான பலன்கள் இருக்கபோகிறது என்று கடந்துசெல்லும் நம்மில் பலருக்கும் அதன் மருத்துவக்குணங்கள் தெரிய வாய்ப்பேஇல்லை......
காசுபோட்டு கடைகடையாக ஏறிஇறங்கி தேடிபார்த்து நாம் வாங்கி உண்ணும் பல்வேறு பழங்களில் இல்லாத அளவிடமுடியாத அற்புதமான நற்பலன்கள் இந்த நெல்லிக்காயில் உள்ளது என்பதே உண்மை......
உடலின் நோய்எதிர்ப்புவன்மையை பெருக்குவதில் வைட்டமின் C க்கு மிகமுக்கிய பங்குண்டு.....
அந்த வைட்டமின் C யை நமக்கு அள்ளித்தருவதில் முதலிடத்தில் இருப்பதும் நம் நெல்லிக்காய் தான்...........
இன்றளவும் பாரம்பரியமான பல்வேறு சித்த ஆயுர்வேத மருந்துகளில் மிகமுக்கியமான,இன்றியமையாத ஒரு கூட்டுசரக்காக இது சேர்க்கப்படுவதே இதன் மருத்துவகுணத்தை வெளிப்படுத்தும்.........
நாட்பட்ட இருமல்(Bronchitis), நாட்பட்ட இரைப்பு என்றழைக்கபடும் சுவாசகாசம் (Bronchial Asthma )., இளைப்பு நோய் (pulmonary tuberculosis)., நாட்பட்ட உடல்எடை இழப்பு (Emaciation)., பீனிசம் (sinusitis) போன்ற பல்வேறு நோய்நிலைகளில் நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகள் இன்றளவும் மிகச்சிறப்பான நற்பலன்களை வழங்கிவருவதை கண்கூடாக பார்க்கலாம்.... மேலும் உடல்வன்மையை பெருக்கி நோய்எதிர்ப்பு ஆற்றலை வழங்கும் என்பதனையும் பல்வேறு ஆய்வு முடிவுகள் உறுதிசெய்கிறது........
ஆகவே ஏதோ ஒரு வகையில் நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகளை கூட்டிக்கொண்டு வந்தாலே நிச்சயம் கொரோனா போன்ற நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.....




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக