வியாழன், 15 ஏப்ரல், 2021

தூதுவளையின் அற்புதங்கள் மற்றும் பயன்களும்

 உடலில் நோயணுகாதபடி காத்து, உடலினை பேணிப்பாதுகாக்கும் அற்புதமூலிகைகளை காயகற்ப மூலிகைகள் என்று வரையறுத்தனர் நம் சித்தர்கள்....

தூதுவளையின் அற்புதங்கள் மற்றும் பயன்களும்

தூதுவளையும் காயகற்ப மூலிகைகளில் ஒன்று என்பதே நமக்கு விந்தையான செய்தியாக தோன்றலாம்.... இது பெரும்பாலும் எல்லா இடங்களிலும் பரந்துவிரிந்து வளரும் தன்மை கொண்டது.... சிறிய முட்களுடன் கூடிய கொடிவகையை சார்ந்தது... பூக்களானது ஊதா நிறத்தில் பூக்கும்... வேலிகளில் அதிகம் படர்ந்து கேட்பாரற்று கிடக்கும்.... இதன் இலை, பூ, காய், வேர் என அத்தனை பாகங்களுமே பல்வேறு அற்புதமான மருத்துவகுணங்கள் கொண்டது..... 🔆🔆
சளி, இருமல் மற்றும் இரைப்பு போன்ற பல்வேறு நுரையீரல் சார்ந்த நோய்களுக்கும், தொற்றுகளுக்கும் மிகுந்த பலனை நல்கும்...
தூதுவளை இலைகளை பறித்து நன்கு சுத்தம் செய்து, அதனோடு மிளகு, சின்னவெங்காயம், பூண்டு, பெருங்காயம், சீரகம் கூட்டி நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48நாட்கள் ) சாப்பிட்டுவர உடலுக்கு வன்மையை கொடுப்பதோடு சளி, இருமல், இரைப்பு (ஆஸ்துமா ) முதலியன நீங்கும் 👍👍👍👍👍
தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை இரவு, 1/2 முதல் 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து, உண்டுவர
இருமல், இரைப்பு நீங்கி உடல் வன்மையடையும்.... உடலுக்கு நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டும் 💪💪
தூதுவளை காயை சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் உண்டுவர கண்ணில் உண்டாகும் பித்தநீர் அதிகரிப்பு குறையும் என்கிறது சித்தமருத்துவம்.... 👍👍👍👍👍
தூதுவளை பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு பாலில் கலந்து அருந்திவர உடலுக்கு வலுவினை கூட்டும்....
தூதுவளை பழத்தினை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டுவர நெஞ்சில் கட்டிக்கொண்டு வெளியேற மறுக்கும் கெட்டிப்பட்ட சளி கரையும். இருமல், இரைப்பு தீரும்... 👌👌👌
தூதுவளை இலைகளோடு துளசி மற்றும் மிளகு போட்டு கஷாயம் செய்து அருந்திவர இருமல் இரைப்பு அணுகாது.....
தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டு வர புற்றுநோய்களின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்....
தொண்டைப்புற்று, கருப்பைபுற்று, வாய்ப்புற்று சார்ந்த புற்றுகளில் நல்ல பலன் கொடுத்துள்ளதையும் இந்த ஆய்வுகள் உறுதிசெய்கிறது...... 👍👍👍👍👍
தூதுவளையில் நிறைந்திருக்கும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு சத்தினால் உடலில் உள்ள எலும்புகளுக்கும், பற்களுக்கும் வன்மை கொடுக்கும்....குறிப்பாக கால்சியம் சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் பல்வேறு வாதநோய்களுக்கு நல்ல பலன்கொடுக்கும்.... 💪💪💪💪
தூதுவளை கீரையை சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலுக்கு வலிமைகொடுப்பதோடு ஆண்மை பலத்தினையும் கூட்டும்....
மேலும் தூதுவளை பூக்களை நெய்யில் வதக்கி பாலில் போட்டு கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை இரவு என தொடர்ந்து பருகிவர விந்தணுக்களின் எண்ணிக்கையை கூட்டும்.... 👍👍
எளிதில் நம்முடைய வீடுகளின் அருகிலே கிடைக்கும் மகத்துவம் பொருந்திய மூலிகைகளை பயன்படுத்தி நோயில்லா ஆரோக்கிய நல்வாழ்வு வாழ்வோம்.... 🙏🙏🙏🙏🙏🙏
Dr.K.Rajkumar.M.D(Siddha).,
சித்த மருத்துவர்.,
சென்னை...

Follow us in Youtube, Telegram, Facebook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக