கொரோனா போன்ற இக்கட்டான இந்த நோய்த்தொற்று காலங்களில் உடலின் நோய்எதிர்ப்பு வன்மையை கூட்டிக்கொண்டு, நோய்த்தொற்றினை தடுத்துக்கொள்ள அனைவரும் முயற்சி மேற்கொள்ளும் இந்த சூழலில் இயற்கையின் மிகவும் அற்புதமான கொடைகளில் ஒன்றான கருவேப்பிலையின் நற்குணங்களையும், அதன் மருத்துவகுணங்களையும் பார்ப்போம்....
எத்தனையோ அற்புதமான மகத்துவங்களை தன்னகத்தே பெற்றுஇருந்தாலும் கருவேப்பிலைக்கான அங்கீகாரம் என்பது மிகவும் குறைவுதான் என்பதே வேதனையான விஷயம்.... பெரும்பாலான உணவுகளின் சுவையினை கூட்டும் பொருட்டு பயன்படுத்தப்படும் கருவேப்பிலையை ஓரமாக ஒதுக்கி வைத்தே பழகிவிட்டோம்....
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடலினை சீராகவும், செம்மையாகவும் வைத்துக்கொள்ளவும், உடலினினை நோய் அணுகாதவண்ணம் காத்துக்கொள்ளவும் உதவும் அற்புதமான மூலிகையே கருவேப்பிலை என்பது பலரும் அறியாத உண்மை.......
இன்றைய சூழலில் முடிஉதிர்தல் பிரச்சனைக்கு தீர்வு தரும் முதல் மருந்து கருவேப்பிலை என்றே சொல்லலாம்.... கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி, லேசாக சட்டியில் போட்டு ஈரம்போகும் வரை வறுத்து, அரைத்துக்கொள்ளவும்... இந்த கருவேப்பிலை பொடியை அன்றாடம் சுடுசோற்றில் போட்டு எடுத்துக்கொண்டு வர கூந்தல் செழித்துவளரும்........ கரிசாலை, நெல்லிக்காய், கீழாநெல்லி, அவுரி, கருவேப்பிலை இவையனைத்தையும் சமஅளவு எடுத்துக்கொண்டு இடித்து சாறு எடுத்து, தேங்காய்எண்ணெயில் போட்டு காய்ச்சி, தலைமுடிதைலமாக பயன்படுத்தி வர நிச்சய பலன்கிடைக்கும்..... 





கண்பார்வையினை மேம்படுத்தும் அற்புத சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. அன்றாடம் இதை உணவில் துவையலாக எடுத்துக்கொள்ள பார்வைதிறன் மேம்படும்..... 




கருவேப்பிலையில் அதிகளவு பீட்டா கரோட்டின், மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளன... வயோதிகம் காரணமாக ஏற்படும் தோல்சுருக்கம், உடல்சோர்வு, முடிநரைத்தல், மூட்டுதேய்மானம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை தடுத்து உடலை காக்கும்......
மேலும் கருவேப்பிலையில் இருக்கும் அதீதமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயையும் எதிர்க்கும் வல்லமை கொண்டுள்ளது என்கிறது பல்வேறு ஆய்வுமுடிவுகள்.... புற்றுநோய்கட்டிகளின் வேகமான வளர்ச்சியினை குறைப்பதிலும், புற்றுக்கட்டிகள் உருவாவதை தடுப்பதிலும் கருவேப்பிலை பயன்அளிப்பதை இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது...... 




மேலும் கருவேப்பிலையை நம் அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டு வரும்போது, நம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பினை (High density lipo protein HDL) உயர்த்தும் என்கிறது நவீன ஆய்வு முடிவுகள்.... 






மேலும் கருவேப்பில்லையை நம் அன்றாடம் உணவில் பயன்படுத்திவர பசியின்மை, ருசியின்மை, செரியாமை, வயிற்றுமந்தம், அஜீரணபேதி, பித்தமயக்கம், பித்தம் சார்ந்த பல்வேறு நோய்களும் தீரும்..... உடலின்
ரத்தசிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி ரத்தசோகை வராமல் தடுக்கும்..... 







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக